தற்போது நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார்
எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு பதிவு செய்யப்பட்டுக்கொண்டு உள்ளது , அதை
செய்யாதவர்கள். தங்கள் ஸ்மார்ட்போனில் Google app store ல் TNePDS என்ற
செயலியை பதிவிறக்கம் செய்து அதில் குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை
போட்டால் ஒரு முறை குறுஞ்செய்தி (one time password) வரும் அதை அந்த
செயலியில் போட்டுக்கொண்டால் நமக்கு நம் பக்கம் திறக்கும் அதில் ஆதார்
எண்ணை பதிவு செய்யும் பொருட்டு நம் ஆதார் அட்டையை. காட்டினால் barcode
ஸ்கேன் செய்யும் , பிறகு அதே போல் எல்லா குடும்ப உறுப்பினர்களின் ஆதார்
அட்டையும் பதிவு செய்யலாம் , , இளைஞர்கள் தாமும் பயன் பெற்று
தெரிந்தவர்களுக்கும் பதிவு செய்து கொடுக்கவும் ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக