இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 மே, 2015

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல்

என்ஜினீயரிங் கல்லூரி களின் தரவரிசை பட்டி யலை அண்ணா பல்கலை கழகம் வெளியிட் டுள்ளது.தமிழகத்தில் தன்னாட்சி அந்தஸ்து பெறாத, அங்கீகாரம் பெற்ற 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.இக்கல்லூரிகளின் 2014 நவம்பர்-டிசம்பர் பருவ தேர்வு மற்றும் ஏப்ரல்-மே மாத பருவ தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிறுவனம 98.33 தேர்ச்சி சதவிகிதம் பெற்று முதலிடத்தை பெற் றுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி 93.36 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தி லும், ஸ்ரீசாய்ராம் தொழில் நுட்ப நிறுவனம் 92.68 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்திலும் உள்ளது.தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள 300 கல்லூரிகள் 50 சதவீதத்திற்கு குறைவாகவும், 78 கல்லூரிகள் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.ஒரு பொறியியல் கல்லூரியில் 2 மாணவிகள் மட்டுமே படித்துள்ளனர். அவர்கள் இருவருமே தேர்ச்சி பெறவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக